Palkalai Journal
Permanent URI for this collectionhttps://ir.lib.pdn.ac.lk/handle/20.500.14444/5760
Browse
Recent Submissions
Item type: Item , கிழக்காசிய நிதி நெருக்கடி : காரணிகளும் விளைவுகளும்(University of Peradeniya, 2000) சின்னத்தம்பி, எம்.அண்மைக்காலப் பொருளாதார விவாதங்களிலும் பொருளாதாரம் சம்பந்தமான எழுத்தாக்கங்களிலும், 1997ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கிழக்கு, தென் கிழக்காசிய நாடுகளிலேற்பட்ட நிதி நெருக்கடியே முக்கிய கருப்பொருளாக ஆராயப்பட்டு வந்துள்ளது. பொருளியல் நுால்கள், சஞ்சிகைகள், புதினப் பத்திரிகைகள், பல்வேறு சர்வதேச தாபனங்களின் அறிக்கைகள் என்பவற்றில் ஏற்கனவே இது பற்றி ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதப்பட்டுள்ளமை இதனது முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. நிதிச் சந்தைகள் உலகளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாலும், மொத்த உலக உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் கிழக்காசிய நாடுகளின் பங்கு உயர்வாக இருப்பதனாலும் கடந்த சில தசாப்தங்களிலேற்பட்ட ஏனைய நெருக்கடிகளிலும் பார்க்க.